அதிருப்தியில் இருந்த துலாம் ராசிக்கார்களுக்கான அதிர்ஷ்டமாக வருகிறது ஐப்பசி..

share on:
Classic

ஐப்பசி மாதப் பலன்கள்:

துலாம்: சித்திரை 3,4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 பாதங்கள்

சுக்கிரன் சொந்த வீட்டில் இருப்பதால் உங்களின் இளமை, அழகு, பேச்சில் கவர்ச்சி கூடுவதால் உங்கள் செல்வாக்கு, இதுவரை வெளிப்படுத்தாமல் இருந்த திறமைகள் புலப்படும். நல்ல வாய்ப்புகள் வரிசையாக வரும். உங்கள் ராசிக்கு 9,12-ம் இடங்களின் அதிபதியான புதன், சூரியன், சுக்கிரனோடு இணைந்து ராசியில் இருப்பதால் பல்வேறு சாதகமான பலன்களை கொடுக்க இருக்கிறார். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். 

சூரியன் உங்கள் ராசியில் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிறு சிறு பிரச்னைகள் தோன்றி மறையும். பல்வேறு வேலைவாய்ப்புகள் வரும். உங்கள் அலுவலத்தில் செல்வாக்கு, மதிப்பு, மரியாதை உயரும் நிலை ஏற்படும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லையே என்று இருந்தவர்களுக்கு நல்ல சம்பள உயர்வுடன் கூடிய வேலை கிடைக்கும்.நீங்கள் எந்த துறையில் பணிபுரிந்தாலும் உங்களது திறமைகள் பளிச்சிடும் உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறக்கூடும்.

அலுவலத்தில் உங்களது நிர்வாக திறன் வெளிப்படும்.  உறவினர்கள் மத்தியில் பகை உருவாகும் என்பதால் சற்று எச்சரிக்கையாக இருப்பது நலம். எதிரிகள் தொல்லைகள் விலகும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு அலைச்சல், சோர்வு மற்றும் தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரக்கூடும்.

News Counter: 
100
Loading...

janani