விருச்சிக ராசிக்காரர்களே, கொஞ்சம் இதப் படிச்சு தெளிவா இருங்கள்..

share on:
Classic

ஐப்பசி மாதப் பலன்கள்:

விருச்சிகம்: விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை

வியாபாரம், சிறு தொழில் செய்கின்றவர்களுக்கு  நல்ல பணவரவு வரும். உடல் நலனில் அக்கறை எடுத்து கொள்ளுங்கள். அக்டோபர் 27-ம் தேதி புதன் பகவான் விருச்சிகம் ராசியில் சஞ்சாரம் செய்கின்றார். புதன் குருவோடு இணைந்து உங்கள் ராசியில் இருப்பதால் அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். உங்கள் ராசியில் புதன் பகவான் இருப்பதால் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றினாலும், குருவுடன் இணைந்து இருப்பதால் எவ்வித பாதிப்பும் வராது.

உங்கள் ராசியில் குரு பகவான் அமர்ந்து உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்ப்பதால் பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு, பிரச்சனைகள்  விலகும். உறவினர்கள் வருகையால் உற்சாகமாக இருப்பீர்கள். புதிய பொறுப்புகள் தேடி வரும். திருமணம் சம்மந்தமான பேச்சுவார்த்தை நல்ல விதமாக முடியும். குழந்தை வரம் எதிர்பார்த்து கொண்டு இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். உங்கள் ராசிநாதன் செவ்வாய், நவம்பர் 27-ம் தேதி வரை சாதகமாக இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றியை தரும்.

12 ஆம் இடத்தில்  சூரியன் இருப்பதால் போட்டி, பொறாமைகள் இருக்கும்.எதிரிகள் தொல்லைகள் அதிகரிக்கும் என்பதால் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஆன்மிக சுற்றுலா சென்று வருவீர்கள். காவல் துறை, ராணுவம்,  நீதி துறையில் பணிபுரிகின்றவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக்கூடும்.

News Counter: 
100
Loading...

janani