3வது வீட்டில் இருப்பவரால் நல்லதுதான் நடக்கும்... எந்த ராசிக்குனு பார்க்க க்ளிக்....

share on:
Classic

ஐப்பசி மாதப் பலன்கள்:

கன்னி: உத்திரம் 2ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2 பாதங்கள்

சூரியன் இரண்டாம் வீட்டில் இருப்பதால் அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம். சுக்கிரனால் பொன், பொருள் சேர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். விலையுர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். அலுவலகத்தில் பல நாட்களாக இருந்த உங்களது கோரிக்கைகள் நிறைவேறும். உறவினர்கள் வருகையால் நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள்.தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு வேலைச்சுமை சற்று குறையும். சுக்கிரன் சொந்த வீடான துலாம் ராசியில் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்பட உள்ளது.

சூரியனால் உடல் நலத்தில் சற்று சோர்வு, களைப்பு ஏற்படும் என்பதால் உணவு எடுத்து கொள்வதில் கவனம் தேவை. உங்கள் ராசிநாதன் புதன் பகவான் மாத தொடக்கத்தில் இரண்டாம் வீட்டில் இருந்து கொண்டு உங்களுக்கு பல விதத்தில் நல்ல பலன்களைக் கொடுக்க இருக்கிறார். புதன் நல்ல நிலையில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். பணியிடத்தில் உங்களது கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் உங்கள் கரம் உயரும். சிலருக்கு மனை, வீடு வாங்கும் வாய்ப்புகள் உள்ளது. குழந்தை வரம் எதிர்பார்த்து கொண்டு இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் காலம் இது.

சகோதர, சகோதிரியிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடு மறைந்து ஒற்றுமை நிலவும். வேலை மாற்றம் , ஊர் மாற்றம் ஏற்படுமோ என்று நினைத்து கொண்டு இருப்பீர்கள். அந்த பயம் வேண்டாம். சொந்தமாக தொழில் அல்லது வியாபாரம் செய்கின்றவர்களுக்கு நல்ல லாபம் வரக்கூடும். இதனால் மேலும் தொழில் வளரும் . சனி பகவான் நான்காம் வீட்டில் தொடர்வதால் குடும்பத்தில் இருப்பவர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வதால் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.  தடைப்பட்ட சுப விசேஷ பேச்சுவார்த்தைகள் நல்ல விதமாக முடியும். குருவுடன் இணைந்து உங்களது மூன்றாம் வீட்டில் இருக்கும் பொழுது எதிர்பார்த்த நல்லவை நடைபெறும். மகிழ்ச்சி நிறையும்.

News Counter: 
100
Loading...

janani