ஐப்பசியில் கும்ப ராசிக்கு உகந்த வசனம் - “பாத்து சூதானமாக இருந்துக்கப்பா”

Classic

ஐப்பசி மாதப்பலன்கள்:

கும்பம்: அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள்

மாத தொடக்கத்தில் சூரியன் ,புதன், சுக்கிரன் உங்களது ஒன்பதாம் வீட்டில் இருந்து கொண்டு சாதகமான பலன்களை கொடுப்பார்கள்.   புதன் குருவோடு இணைந்து உங்களது பத்தாம் வீட்டில் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் உங்களது முயற்சியால் வெற்றி பெறுவீர்கள். இல்லத்தில் இருப்பவர்கள் உங்களது பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பர். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் ஆடை, ஆபரணம் சேர்க்கை உண்டாகும். சிலர் விலையுர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மகிழ்ச்சியாக காணப்பட்டாலும் புதனால் சற்று மனம் சஞ்சலம் ஏற்படும்.

அலுவலத்தில் உங்களது திறமைக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். மனதில் தேவையில்லாத சிந்தனை, குழப்பங்கள் தோன்றக்கூடும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டும். சற்று வேலைச்சுமை, வீண் அலைச்சல் இருக்கக்கூடும். உழைப்பு ஏற்ற பலன் கிடைக்காமல் போகாது, எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் எதிரிகள் தொல்லைகள் அதிகரிக்கும். போட்டி, பொறாமைகளை எதிர்கொண்டு வெற்றி பெறும் மாதமாக இருக்கப் போகின்றது. இல்லத்தில் இருப்பவர்களுடன் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். யாரையும் வீணாக பேசி பகைத்து கொள்ள வேண்டாம்.

பிள்ளைகள் சம்மந்தமாக எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியை தரக்கூடும். கணவன் மனைவி இடையே இணக்கம் உண்டாகும். சகோதரர் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாழக்கிழமை அன்று அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று குரு வழிபாடு செய்யுங்கள் மனம் தெளிவு அடையும்.

News Counter: 
100

janani