மகர ராசி அன்பர்களின் விடா முயற்சி ஐப்பசியில் விஸ்வரூப வெற்றியை அடையும்...

Classic

ஐப்பசி மாதப் பலன்கள்:

மகரம்: உத்திராடம் 2ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்

போட்டிகளை சமாளித்து வெற்றி அடைவீர்கள். பணவரவு சீராக வந்து கொண்டே இருந்தாலும், செலவுகள் அடுத்தடுத்து இருந்து கொண்டே இருக்கக்கூடும். உங்களது ஜீவனஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்கிரன் வலுவாக துலாம் ராசியில் இருந்து கொண்டு உங்களுக்கு பல விதத்தில் நற்பலன்களைக் கொடுப்பார். புதன் குருவோடு இணைந்து உங்களது பதினோராம் வீட்டில் இருப்பதால் தாராளமான பணவரவு வரக்கூடும்.

உங்களது அபார ஆற்றலால் தடைபட்டு கொண்டு இருந்த விஷயங்களை முடித்து விடுவீர்கள். விலையுர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். பணியிடத்தில் உங்களது நிர்வாக திறமை புலப்படும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

அரசு துறையில் இருக்கின்றவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம், பதவி உயர்வு வருவதற்கு சற்று தாமதம் ஏற்படக்கூடும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். உங்களது தொழிலை விரிவாக்கம் செய்வதற்கு ஏற்ற நேரமாக இருக்கின்றது. குடும்பத்தில் பொருளாதார வளர்ச்சி மேம்படும். வசதி, வாய்ப்புகள் பெருகும். ஆரோக்கியம் சீராகும். புதிய வாய்ப்புகளை தக்க வைக்க விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டிய மாதமாக இருக்கப் போகின்றது.

News Counter: 
100

janani