காசு.. பணம்.. துட்டு.. மணி.. தனுசு ராசி அன்பர்களை அட்சய பாத்திரமாக மாற்றும் ஐப்பசி...

share on:
Classic

ஐப்பசி மாதப் பலன்கள்:

தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்

மாத தொடக்கத்தில் சூரியன், சுக்கிரன், புதன் பதினோராம் வீட்டில் இருப்பதால் தாராளமான பணவரவு வரக்கூடும். அக்டோபர் 27-ம் தேதி புதன் பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கின்றார். புதன் குருவோடு இணைந்து 12ம் வீட்டில் இருக்கும்போது பயணங்கள் அதிகரிக்கக்கூடும். உற்றார், உறவினர்களின் விருந்து, விழாக்களில் கலந்து கொள்வீர்கள். புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வேலைச்சுமை அதிகரிக்கும்.

போட்டி, பொறாமைகள் இருக்கும் என்பதால் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மூன்றாம் நபரை நம்பி எவ்வித விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஒரு சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகம் இருக்கின்றது. குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறக்கூடும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும் என்பதால் ஏதேனும் சேமிப்பு திட்டத்தில் பணத்தை முதலீடு செய்வது நன்மை தரக்கூடும்.

அரசு சம்மந்தமாக அனுகூலம் ஏற்படும். அலுவலகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படக்கூடும். அரசு சார்ந்த துறையில் பணிபுரிகின்றவர்களுக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கக் கூடும். சம்பள உயர்வு, பதவி உயர்வு எதிர்பார்க்கலாம். வியாபாரம், தொழில் சிறப்பாக இருக்கக்கூடும். பூஜை , ஆன்மிகம் சம்மந்தமான பொருட்களை வியாபாரம் செய்கின்றவர்களுக்கு நல்ல லாபம் வரக்கூடும். இரண்டாம் வீட்டில் கேது இருப்பதால் சற்று எதிரிகள் தொல்லைகள் அதிகரிக்கக்கூடும். பெற்றோர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள்.

News Counter: 
100
Loading...

janani