மீன ராசிக்கு ஒன்பதுல குரு... ஐப்பசியில் ஐஸ்வர்யம் நடக்க வாய்ப்பு...

share on:
Classic

ஐப்பசி மாதப் பலன்கள்:

மீனம்: பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

குரு பகவான் ஒன்பதாம் இடத்தில் இருந்து கொண்டு உங்களது ராசியை பார்ப்பதால் தொட்டது துலங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை, சச்சரவு மறைந்து ஒற்றுமை புலப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும் புதன் குருவோடு இணைந்து ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் நினைத்த காரியத்தை முடிக்கும் ஆற்றலை கொடுப்பார். உங்களுக்கு ஏற்படும் சவால்களை மிக எளிதாக எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள்.பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். நிதானமாக, பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

தாராளமான பணவரவு வரக்கூடும். விலையுர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் படிப்பு, வேலை சம்மந்தமாக நல்ல செய்தி கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் வீண் பகை உருவாகும் என்பதால் பேச்சில் கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதை தவிர்த்திடுங்கள். யாரையும் புறம் பேசாதீர்கள். தானுண்டு தன்  வேலையுண்டு என்று இருந்தாலே, பல வித பிரச்சனைகளுக்கு மீன ராசியினர் முற்றி புள்ளி வைக்கலாம்.

மாத முற்பகுதியை விட பிற்பகுதியில் முன்னேற்றமான சூழல் ஏற்படும்.. குழந்தை பாக்கியம் எதிர்பார்த்து கொண்டு இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  வியாபாரம், தொழில் செய்கின்றவர்களுக்கு  கணிசமான லாபம் வரக்கூடும். தடைபட்டுக் கொண்டு இருந்த விஷயங்கள் யாவும் தங்கு தடையில்லாமல் படிப்படியாக நடைபெறக்கூடும்.

News Counter: 
100
Loading...

janani