டெல்லி: அர்பித் பேலஸ் ஓட்டலில் தீ விபத்து: 9 பேர் பலியான சோகம்

share on:
Classic

டெல்லியில் ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

டெல்லி கரோல் பாக் பகுதியில் உள்ள அர்பித் பேலஸ் ஓட்டலில், இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக பற்றிய லேசான தீ, மளமளவேன ஓட்டலில் இருந்த 40 அறைகளிலும் பரவியது. கொழுந்துவிட்டெறிந்த தீயால் அப்பகுதி முழுவதும் கரும் புகையால் சூழப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 28 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், இந்த விபத்தில் சிக்கி 6 ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். மேலும் ஓட்டலில் தங்கியிருந்த 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், வேறு யாரெனும் ஓட்டலுக்குள் சிக்கியுள்ளனரா என மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

aravind