ஆசையாய் கட்டிய வீட்டை இடிக்க மனமில்லாமல் மாற்றுவழி கண்ட உரிமையாளர்..!

share on:
Classic

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ளது பெருமாள்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வரும் கிருஷ்ணகுமார் சாலை அருகே சில மாதங்களுக்கு முன்பு நிலம் வாங்கி ஆசையாக வீடு ஒன்று கட்டியுள்ளார். ஆனால் தான் கட்டிய வீட்டில் வசிக்க முடியாதபடி கிருஷ்ணகுமாருக்கு பேரிடி ஒன்று காத்திருந்தது. 

அவர் வீடு கட்டிய இடத்தில் நான்குவழி சாலை அமைய உள்ளதால் கிருஷ்ணகுமாரின் நிலத்தை கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதன் மூலம் ஆசையாய் கட்டிய தனது வீடு இடிக்கப்படும் என்ற கவலையில் இருந்த கிருஷ்ணகுமாருக்கு நண்பரின் ஆலோசனை ஆறுதல் அளித்தது. 

அதன்படி ஜாக்கி மூலம் வீடு நகர்த்தும் நிறுவனத்தை தொடர்பு கொண்ட கிருஷ்ணகுமார் தனது வீட்டிற்கு பாதிப்பில்லாமல் வேறு இடத்திற்கு நகர்த்தும்படி கேட்டுக் கொண்டார். அதன்பிற்கு சுமார் பத்து லட்சம் ரூபாய் செலவில் கிருஷ்ணகுமாரின் வீட்டை பெயர்த்து எடுத்து வேறு இடத்தில் வைக்கும் பணி தொடங்கியது.

வெளிமாநிலத்தில் இருந்து வந்த கட்டிடத்துறை வல்லுநர்கள் 2 மாதங்கள் செலவழித்து 15 ஊழியர்களை கொண்டு ஜாக்கிகள் மூலம் வீட்டை நகர்த்தி வேறு இடத்தில் வைத்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஜாக்கி மூலம் வீட்டை நகர்த்தி தனியே பெயர்த்து எடுத்து வைத்தது இதுவே முதல் முறை.

ஓரிடத்தில் கட்டப்பட்ட வீட்டைப் பெயர்த்தெடுத்து வேறு இடத்தில் வைத்திருப்பதை ஆச்சர்யமாக பார்த்து செல்கின்றனர் அப்பகுதியை சேர்ந்த மக்கள்.

 

News Counter: 
100
Loading...

aravind