அஞ்சல் துறையிலும் வந்துவிட்டது இண்டெர்நெட் பேங்கிங்..!! எப்படி பயன்படுத்துவது..?

share on:
Classic

இந்திய அஞ்சல் துறை மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வரும் நிலையில், அதன் இண்டெர்நெட் பாங்கிங் சேவையை எப்படி பயன்படுத்துவது என்ற வழிமுறைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சேமிப்பு கணக்குகள் :

இந்திய அஞ்சல் துறை மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அஞ்சல் துறையின் கீழ் 1.5 லட்சம் தபால் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு வழக்கமான சேமிப்பு கணக்குகள் மூலம் மக்கள் தங்கள் பணத்தை செலுத்தி சேமித்து வருகின்றனர். சேமிப்பு கணக்குகளுக்கு ஒரு ஆண்டுக்கு 4 சதவீத வட்டியும் அஞ்சல் துறை கொடுத்து வருகிறது. போஸ்ட் ஆபிஸ் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இண்டெர்நெட் பேங்கிங் வசதியையும் இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. ebanking.indiapost.gov.in என்ற இணையதள முகவரியில் நீங்கள் இந்த வசதியை பெற முடியும்.

இண்டர்நெட் பேங்கிற்கு தேவையான ஆவணங்கள் :

 • வாடிக்கையாளர்களிடம் தற்போது ஆக்டிவாக உள்ள வங்கிக்கணக்கு இருக்க வேண்டும்.
 • வங்கிக்கணக்கு தொடர்புடைய ஆவணங்கள் கொண்டிருக்க வேண்டும்.
 • ஆக்டிவாக உள்ள ஏடிஎம் டெபிப் கார்டு வைத்திருக்க வேண்டும்.
 • சரியான மொபைல் எண் மற்றும் பான் நம்பர் ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும்.

பயன்கள் :

இந்த இண்டெர்நெட் பாங்கிங் மூலம் ஒரு போஸ்ட் ஆபீஸ் வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு போஸ்ட் ஆபீஸ் வங்கி கணக்கிற்கு ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.
சேமிப்புக் கணக்குகளில் ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி உண்டு.
இந்த வசதி மூலம் ஆர்டி கணக்கு மற்றும் ஃபிக்ஸ்டு கணக்குகளில் பணம் செலுத்தவோ, அல்லது கணக்கை தொடங்கவோ அல்லது முடிக்கவோ முடியும்.

இந்தியா போஸ்ட்-ன் இண்டர்நெட் பாங்கிங்-ல் பதிவு செய்வதற்கான வழிமுறைகள் :

 • வாடிக்கையாளர்கள் தங்கள் கிளைகளில் சென்று ஆன்லைன் பாங்கிங் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
 • தேவையான ஆவணங்களுடன் சேர்த்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.
 • இந்த நடைமுறை முடிந்தவுடன், பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும்
 • அந்த எஸ்.எம்.எஸ்-ல் இந்தியா போஸ்டின் இண்டெர்நெட் பேங்கிங் வசதியை கிளிக் செய்தால், புதிய ஆன்லைன் பேங்கிங் பக்கம் வரும்.
 • அந்த பக்கத்தில் "New User Activation" என்ற ஹைபர்லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
 • அதில் குறிப்பிட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, புதிய பயனாளர் பெயர், பாஸ்வேர்டை கட்டமைக்க வேண்டும்.
 • லாகின் செய்த பின்பு பாதுகாப்பு கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்

 

News Counter: 
100
Loading...

Ramya