TNPSC குருப்-4க்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

share on:
Classic

TNPSC குருப்-4 2019 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப்படிவம்: 

தமிழ்நாடு பொது சேவை ஆணையம்(TNPSC), 2019-ம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் சமீபத்திய செய்திகளின் படி TNPSC குருப்-4 ஆட்சேர்ப்பு விண்ணப்ப நடைமுறை 2019 ஜூன் 14 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மேலும் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 2019 ஜூலை 14-ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. TNPSC குருப்-4-ல் பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், விண்ணப்பிக்க வேண்டிய விண்ணப்ப படிவங்கள் மற்றும் கடைசி தேதியை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் மற்றும் தகுதி வரம்பை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். tnpscexams.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.  

TNPSC குருப்-4 2019 தேர்வு நாட்கள்:

தமிழ்நாடு பொது சேவை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி TNPSC குருப்-4 ஆட்சேர்ப்பு எழுத்துத் தேர்வு 2019 செப்டம்பர் 1 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC குருப்-4 குறித்த அனைத்து சமீபத்திய அறிவிப்புகளை தெரிந்துகொள்ள tnpsc.gov.in என்ற இணையதளத்தை தொடர்ந்துப் பார்வையிட பரிந்துரைக்கப்படுகிறது.    

TNPSC குருப்-4 தேர்வுக்கான அடிப்படை தகுதி:  

விண்ணப்பதாரர்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து SSLC-ஐ முடித்திருக்க வேண்டும். SSLC முடிக்காதவர்கள், SSLC-க்கு சமமான கல்வி தகுதி சான்றை அரசாங்க உத்தரவுடன் விண்ணப்பிக்கலாம். SSLC-ல் தோல்வியடைந்த பட்டதாரிகள விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என தமிழ்நாடு பொது சேவை ஆணையம் தெரிவித்துள்ளது.

TNPSC குருப்-4 தேர்வுக்கான விண்ணப்ப படிவம்:

தமிழ்நாடு பொதுச் சேவை ஆணையத்தின் இணையதளத்தில் TNPSC குருப்-4 தேர்வுக்கு எந்தவொரு பணிக்கும் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.    

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டியது எப்படி?

1. tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குள் நுழையவும்.

2. இணையதளத்தில் அறிவிப்பு டாபில் (Notifications tab) 'சமீபத்திய அறிவிப்பு'-ஐ தேர்ந்தெடுங்கள். பின்பு பதிவு செய்யும் இணைப்பான http://tnpsc.gov.in/latest-notification.html தேர்ந்தெடுக்கவும். 

3. புதிய பக்கம் திறந்த பிறகு விவரங்களை பூர்த்தி செய்து 'சமர்ப்பி' (submit) என்ற பட்டன்னை அழுத்தவும்.  

4. கிளிக் செய்த பின்பு வரும் பதிவு எண்ணைக் (registration number) குறித்துக்கொள்ளுங்கள்.    

5. ’அப்லை’(Apply) என்ற படன்னை கிளிக் செய்யவும். விண்ணப்ப படிவம் திரையில் காண்பிக்கப்படும்.   
   
6. விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 'சமர்ப்பி' (submit) என்ற படன்னை அழுத்தவும்.

7. பின்பு தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்

8. கட்டண ரசீதின் நகலை கட்டாயம் வைத்துக்கொள்ள வேண்டும். 

காலிப் பணியிடங்களின் பட்டியல்:

கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer) - 397

ஜூனியர் அசிஸ்டண்ட் (Junior Assistant (Non- Security))  - 2,688

ஜூனியர் அசிஸ்டண்ட் (Junior Assistant (Security)) - 104 

பில் கலெக்டர், கிரேடு -1 (Bill Collector, Grade-I) - 34

ஃபீல்டு சர்வேயர் (Field Surveyor) - 509

TNPSC குருப்-4 தேர்வுக்கான கட்டணம்: 

நீங்கள் முதல் முறையாக பதிவு செய்தால், ரூ.150 பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். பதிவுக் கட்டணமாக ரூ.150-ம், தேர்வுக் கட்டணமாக ரூ.100-ம் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலமாகவும் செலுத்தலாம். நீங்கள் எஸ்பிஐ, எச்.டி.எஃப்.சி கிளைகளிலும் அல்லது தபால் அலுவலகத்திலும் ஆஃப்லைனில் செலுத்தலாம். வங்கி சலானின் நகலை வைத்திருக்க வேண்டியது அவசியம். முன்னாள் இராணுவத்தினர், SC, ST, மாற்றுத்திறனாளி மற்றும் விதவைகளுக்கு தேர்வுக் கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படுகிறது. 

தேவைப்படும் ஆவணங்கள்:

முழுமையான விவரங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்க, 10-ம் வகுப்பு சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.  நீங்கள் ஆன்லைனில் தேர்வுக் கட்டணத்தை செலுத்த விருன்பினால் கிரெடிட்/டெபிட் கார்டு (credit/debit card) விவரங்கள் உங்களிடம் இருக்க வேண்டும்.

News Counter: 
100
Loading...

udhaya