சுவையான இறால் முருங்கைக்காய் கிரேவி எப்படி செய்வது..?

share on:
Classic

அசைவ உணவில் ஒரு தனி இடத்தை பிடிக்கிறது இறால் சமையல் வகைகள். இறால் தொக்கு, இறால் வறுவல், இறால் பிரியானி, இறால் குழம்பு வகைகளை சாப்பிட்டிருப்பீர்கள். இப்போது, சற்று வித்தியாசமாக, சுவையான இறால் முருங்கைக்காய் கிரேவி எப்படி செய்வது என்பதை பார்ப்போம்...

சமைக்கத் தேவையான பொருட்கள் :
முருங்கைக்காய் - 4
இறால் - 1 கிலோ
நறுக்கிய வெங்காயம் - 5
நறுக்கிய தக்காளி - 5
பொடித்த மிளகு சீரகம் - 4 டேபிள் ஸ்பூன் 
மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
அரைத்த தேங்காய் விழுது - 1 கப் 
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்வது எப்படி..?
முதலில், இறாலை நன்றாக சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், பொடித்த மிளகு சீரகம் சேர்த்து வதக்கவும். பின் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி வதங்கியவுடன் முருங்கைக்காய் மற்றும் இறாலை சேர்த்து கிளரி, 5 நிமிடம் வேகவிடவும்.

பிறகு, கரம் மசாலா சேர்த்து, தேவைாயன அளவு தண்ணீர் ஊற்றி, அரைத்த தேங்காய் விழுது சேர்த்து, பதமாக கிளரி விடவும். பின்பு, கடாயை மூடிவைத்து, 15 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும். எண்ணெய் மேலே தெளிந்து வந்தவுடன் இறக்கினால், சுவைாயன இறால் முருங்கைக்காய் கிரேவி ரெடி.

News Counter: 
100
Loading...

Ragavan