கோடை வெப்பத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்..??

share on:
Classic

கோடை காலத்தின் வெப்பம், இனி வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் தங்களை வெப்பத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளவேண்டும். வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்வது எப்படி? என விவரிக்கிறது, இந்த செய்தித்தொகுப்பு...

வெயிலில் இருந்து காத்துக் கொள்வது எப்படி..?
கோடைக்காலத்தில் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது கட்டாயம் வெயிலில் இருந்து நம்மை காத்துக் கொள்ள கைத்தறி, கதர் ஆடைகளை அணிய வேண்டும். வெளியே செல்லும் போது கண்ணாடி, குடை ஆகியவற்றை பயன்படுத்துவதால் வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மைக் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

வெட்ட வெளியில் வேலை செய்பவர்கள் தொப்பி அணிந்து கொள்ளலாம். முடிந்தவரை வெயிலில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படி வேலை செய்யும் பட்சத்தில், கூடுதல் ஓய்வு நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். உச்சி வெயில் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்த்து, மாலை மற்றும் இரவு நேரங்களில் செல்வது நல்லது.

உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள...
கோடை வெப்பத்தால் உடலுக்கு அதிக அளவில் நீர்ச்சத்து தேவைப்படும் என்பதால் எப்பொழுதும் கையில் தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்ல வேண்டும். உடலுக்கு போதுமான நீர்சத்து தேவை என்பதால், உணவில் அதிக அளவில் பழங்கள், காய்கறிகள், பழச்சாறு போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். உடலை குளிர்ச்சியாக வைக்க மோர், கூழ் ஆகியவற்றை அருந்தலாம். வறுத்த, காரமான உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டியது அவசியம்.

உடல் வெப்பத்தை தணிக்க நாளோன்றுக்கு 2 முறை குளிப்பது நலம் பயக்கும். அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும். முகத்தை அடிக்கடி நீரினால் கழுவுவதன் மூலம் வெயிலின் வறட்சியிலிருந்து காத்து கொள்ள முடியும்.

News Counter: 
100
Loading...

Ragavan