கோடையில் ஏற்படும் நோய் தொற்றிலிருந்து காத்துக்கொள்வது எப்படி..!

share on:
Classic

கோடை காலத்தில் ஒருபுறம் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், மறுபுறம் குழந்தைகள் முதல் முதியவர் வரை நோய் தாக்குதலால் அவதி அடைகின்றனர். இதுபோன்ற இன்னல்களில் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பை பார்ப்போம்...!

கோடை காலம் என்றாலே குழந்தைகளுக்கு எப்போதும் உற்சாகம் தான். உற்சாக மிகுதியில் வெயிலில் ஆட்டம் பாட்டம் என விளையாடும் குழந்தைகளுக்கு பல நோய்கள் எளிதில் ஆட்கொள்கின்றன. சரும நோய்கள், அம்மை நோய், வயிற்று போக்கு போன்ற நோய்கள் எளிதாக குழந்தைகளை இந்த கோடை காலத்தில் தாக்ககூடியவை. இவற்றிற்கு முக்கிய காரணமாக உடலில் நீரின் குறைப்பாடு காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற நோய்களில் இருந்து குழந்தைகளை தற்காத்துக் கொள்ள பெற்றோர்கள் அதிக நீர் சத்துள்ள பழ வகைகள், பழச்சாறு, சுத்தமான குடிநீர் போன்றவற்றை பெற்றோர்கள் வழங்க வேண்டும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

கோடை காலங்களில் குழந்தைகள் கவனிப்பில் பெற்றோர் கவனக்குறைபாட்டுடன் இருந்தால், எளிதாக சீறுநீரக கோளாறு மற்றும் செயலிழப்பு, மலசிக்கல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

கத்தரி வெயில் சுட்டெரிக்கும் கோடை காலத்தில் குழந்தைகள் மட்டுமில்லாமல் வயது முதிந்தவர்களையும் நோய் தொற்றிக் கொள்கிறது. வெப்பத்தின் தாக்கத்தின் போது, முதியவர்கள் சரியான அளவு நீர் எடுத்து கொள்ளாமல் இருந்தால், உடலில் இருக்கூடிய உப்பு சத்து குறையும் என்றும், இதன் விளைவாக நோய்கள் தாக்கக் கூடும் என்கின்றனர் மருத்துவர்கள். இதிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள சுத்தமான காய்ச்சி ஆரவைத்த குடிநீர், பழச்சாறு, இளநீர் ஆகியவற்றை எடுத்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் குழந்தைகளை ஆரோக்கியத்துடன் பேணிக் காக்க உணவிலும், உடல் நலத்திலும் அக்கறை காட்ட வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும்.

News Counter: 
100
Loading...

Ragavan