வியர்வை நாற்றத்தை போக்க சில இயற்கை வழிமுறைகள்..!!

share on:
Classic

கோடை காலத்து வெயிலால் பலருக்கும் வியர்வை அதிகமாக வெளியேரும். அதனால் துர்நாற்றமும் ஏற்படும். அந்த துர்நாற்றத்தை தவிர்க்க சில இயற்கை வழிமுறைகள் உண்டு. அதனை கீழே காண்போம்.

மழைக்காலங்களை விடவும் கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலாலும், வெப்பத்தாலும் உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளியேறுவதால், நாம் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குளிப்பது ஆரோக்கியத்தைத் தரும். இல்லாவிட்டால் வியர்வை துர்நாற்றத்தினால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும்.

இதனை தவிற்க்க என்ன செய்ய வேண்டும்..?
ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து அதை அக்குள்களில் தடவி சில நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் தினமும் குளித்து வந்தால், துர்நாற்றம் போகும்.

ஆப்பிள் சீடர் வினிகரை (Apple Cider Vineger) பஞ்சில் நனைத்து, அதை அக்குளில் தடவி 2 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் 2 முறை செய்தால் பலன் கிடைக்கும்.

தினமும் குளிக்கும் முன் ஒரு துண்டு எலுமிச்சயை அக்குளில் தேய்த்து அது காய்ந்த பிறகு குளிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வர, உடல் துர்நாற்றம் விரைவில் குறையும்.

சுத்தமான சந்தனத் தூளை எடுத்து, அதில் நீர் சேர்த்து பேஸ்ட் போல செய்து, அக்குளில் தடவி நன்கு காய வைக்கவும். பிறகு, குளிர்ந்த நீரைக் கொண்டு சுத்தப்படுத்தவும். இவ்வாறு வெய்யிற் காலங்களில் அடிக்கடி செய்து வர வியர்வை நாற்றம் மற்றும் அக்குளில் உள்ள கருமை முழுவதும் நீங்கும்.

News Counter: 
100
Loading...

Ragavan