பணிபுரிவதற்கு சிறந்த நாடுகள் எது தெரியுமா? HSBC வங்கி அதிர்ச்சி ரிப்போர்ட்

share on:
Classic

பணிபுரிவதற்கு சிறந்தநாடுகள் எது என்பது பற்றி HSBC வங்கி ஆய்வு நடத்தி அதன் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

தங்கள் நாட்டை விட்டு வேறு நாட்டில் சென்று பணிபுரியும் 22,000 பேரிடம் HSBC வங்கி ஆய்வு ஒன்று மேற்கொண்டது.அதில் பணிபுரிவதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் ஜெர்மனி முதலிடத்தையும், பஹ்ரின் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. பணிபுரிவதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் பிரிட்டேன் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. அதே போல் புதிய திறமைகளை கற்றுக்கொள்ள விரும்பும் நாடுகளின் பட்டியலில் பிரிட்டேன் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டின் ஆய்வை ஒப்பிடுகையில் பிரிட்டேன் ஆறு இடங்கள் முன்னேறி தற்போது மூன்றாம் இடம் பிடித்துள்ளது. புதிய திறமைகளை கற்றுக்கொள்ளும் திறன், வேலை, வெளிநாட்டினர்களின் வாழ்க்கை முறை, பணி சூழல், வேலையில் உயர்பதவி, பணியில் ஊழியர்களின் உரிமைகள், சலுகைகள் மற்றும் திருப்தி போன்ற கேள்விகளை அடிப்படியாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், மூன்றாம் இடம் பிடித்த பிரிட்டேனில் பணிபுரிவோரில் பெரும்பாலானோர் ரோமானியா, பிரான்ஸ் மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

youtube