50,000 ரூபாய் சம்பளத்தை காலி செய்த ஐபோன் ட்வீட்..!

share on:
Classic

ஐபோனை பயன்படுத்தி  ஹுவாய் நிறுவன அதிகாரபூர்வ பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ஹுவாய் ஊழியர்கள் பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

"Happy #2019" என ஹுவாய் நிறுவன அதிகாரபூர்வ பக்கத்தில் ட்வீட் செய்யப்பட்டிருந்தது. அந்த ட்வீட்டின் கீழ் இது ஐபோன் வழியாக செய்யப்பட்ட ட்வீட் என காண்பிக்கப்பட்டதே அந்த ஊழியர்களுக்கு சிக்கலாக மாறியது.ஆனால்,அந்த ட்வீட் போடப்பட்ட உடனேயே அதிகாரபூர்வ பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் ட்வீட் ஆனது பலமுறை பார்க்கப்பட்டு பகிரப்பட்டுவிட்டது.

 

நிறுவனத்தின் வளர்ச்சியை பாதிக்கும் விதமாக இந்நிகழ்வு அமைந்துள்ளது என ஹுவாய் நிறுவனத்தின் இயக்குனரான சென் லிஃபாங்  கூறியுள்ளார். சீனாவில் சமூக வலைதள பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு இருப்பதால்  ஐபோன் வழியாக ரோமிங் சிம் உபயோகித்து இந்த ட்வீட் போடப்பட்டதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டது .

ஜனவரி முதல் செப்டம்பர் வரை ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி  ஆப்பிள் நிறுவனத்தின் இடத்தை பிடித்த , நிறுவனத்திற்கு இது மிகப்பெரிய அடியாகும். இதன் காரணமாக தவறு செய்த இரண்டு ஊழியர்களுக்கும் (5000 யுவான்)  இந்திய மதிப்பில் சுமார் 50000 ரூபாய் ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது.மேலும் 12 மாதத்திற்கு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐபோன் நிறுவனத்தால் ஹுவாய் நிறுவனம் சந்திக்கும் மன உளைச்சல் இது முதன் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
 

News Counter: 
100
Loading...

youtube