நான்கு கேமராக்கள் கொண்ட Huawei Y9 Phone.. எப்போது விற்பனைக்கு..?

share on:
Classic

இந்தியாவில் ஹுவாய் ஒய்9 (Huawei Y9) ஸ்மார்ட்போன் எப்போது விற்பனைக்கு வரும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் போன் குறித்த டீஸர் அண்மையில் அமேசான் இணையதளத்தில் வெளியிடப்பட்டு அனைவரின் எதிர்பார்ப்பையும் தூண்டியது. அமேசான் இந்தியா இணையதளத்தில் பிரத்யேகமாக விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஜனவரி. 15-ஆம் தேதி இதன் விற்பனை தொடங்கும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.15,990 என ஹுவாய் ஒய்9 2019 (Huawei Y9) ஸ்மார்ட் போனின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஹுவாய் ஒய்9 2019 (Huawei Y9) வடிவமைப்பு மற்றும் செயல்திறன் : 

திரை அமைப்பு (Display):

ஹுவாய் ஒய்9 2019 (Huawei Y9) ஸ்மார்ட் போன் 6.5 இன்ச் HD டிஸ்பிளே, கிரின் 710 பிராசஸர், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் அம்சங்களை இந்த ஸ்மார்ட் போன் பெற்றுள்ளது.

சேமிப்பு திறன்(Memory) : 

4 GB RAM 64 GB இன்டர்னல் ஸ்டோரேஜ் பெற்றுள்ள இந்த மொபைலின்  சேமிப்பு திறனை (Extrenal Storage) மைக்ரோ எஸ்.டி கார்டு மூலம் 256 GB வரை விரிவு செய்துக்கொள்ளலாம்.

கேமரா : 

13 மெகா பிக்ஸல்(MP) + 2 மெகா பிக்ஸல் (MP) பின்பக்க கேமரா மற்றும் 16 மெகா பிக்ஸல் (MP) + 2 மெகா பிக்ஸல் (MP) முன்பக்க கேமரா (Selfie Camera) என 4 கேமரா வசதியை இந்த ஸ்மார்ட் போன் பெற்றுள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில் நுட்ப கேமரா இந்த போனில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி மற்றும் பிற வசதிகள்: 

4000mah பேட்டரி திறன் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் டூயல் 4ஜி வோல்ட் இ, வைஃபை, ப்ளூடூத், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ஆகிய சிறப்பம்சங்களை பெற்றுள்ளது . கருப்பு மற்றும் நீலம் ஆகிய இரண்டு நிறங்களில் இந்த ஸ்மார்ட் போன் வெளியாக உள்ளது.

News Counter: 
100
Loading...

youtube