ஸ்ட்ரோக் - பக்கவாதம்... வருவதற்கான 2 முக்கிய காரணங்கள்

share on:
Classic

இன்றைய காலத்தில் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கூட பக்கவாதம் வந்துவிடுகிறது. இது வருவதற்கான இரண்டு மிக முக்கிய காரணம் என்ன தெரியுமா??

1) BP/பிரசர்/இரத்தகொதிப்பு// என்று அழைக்கப்படும் ஹைப்பர்டென்சன் நோய்,

2) சர்க்கரை / சுகர் என்று அழைக்கப்படும் ஹைபர்க்லய்சீமியா நோய்

1 ரூ BP மாத்திரை மற்றும் 2 ரூ சக்கரை மாத்திரை உங்களுக்கு வர இருக்கும் ஸ்ட்ரோக்-கை தடுக்கும்.. பல பேர் மாத்திரை போட சோம்பேறித்தனம், அஜாக்கிரதை போன்ற காரணங்களால் வம்பை விலை குடுத்து வாங்குகிறார்கள். ஆமாம் விலை குடுத்து தான். எப்படீன்னா..ஸ்ட்ரோக் வந்த உடன் பிரபலமான மருத்துவமனைக்கு "தூக்கி" செல்ல வேண்டும் முதலுதவிக்கு மட்டும் 2 சுமார் லட்சம் செலவாகும். அதன் பின்னர் குறைந்தது 6 மாதம் 1 முதல் வருடம் வரை பிசியோதெரபி என மொத்தத்தில் 4 முதல் 6 லட்சம் வரை செலவு செய்ய வேண்டி வரும்.

அது இல்லாம இது வரை நீங்கள் பார்த்து கொண்டிருந்த வேலையை பார்க்க முடியாது (கை கால் இல்லாமல் நிற்கவே முடியாது) அதனால் வருமான இழப்பு. குறைந்தது ஒரு வருடத்திற்கு 3 லட்சம் என திடீரென்று உங்களை தாக்கும் பொருளாதார புயல், 10 லட்சம் வரை கடனில் கொண்டு விடும் அதுவும் 40 வயதில்...

உங்கள் குழந்தைகள் படிப்பு திருமணத்தில் செட்டில் ஆகும் நேரம்... இது அல்லாமல் நடக்க முடியாத, கை பயன்படுத்த முடியாத நிலையில் 'அனைத்திற்கும்' அடுத்தவர்களை எதி பார்க்க வேண்டி வரும் கடுமையான மன உளைச்சல்.ஆதலால் மக்களே..... மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் நிறுத்தாதீர்கள் / உட் கொள்ளாதீர்கள்.

News Counter: 
100
Loading...

vijay