ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மனித சங்கிலி..!!

share on:
Classic

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கடலூரில் 500க்கும் மேற்பட்டோர் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.   

மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தும் முடிவை கைவிட வலியுறுத்தி மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கடலூரில் பெரியார் சிலையில் இருந்து உழவர் சந்தை வரை திமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளும் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.  இந்த மனிதசங்கிலி போராட்டத்தில்  தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், முன்னாள் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதே போல, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருத்துறைப்பூண்டி அருகே கடியாச்சேரியில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இவ்வாறு டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எண்ணெய் கிணறு அமைக்கும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டால், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர். இதனால், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி திருத்துறைப்பூண்டியில் இருந்து முத்துப்பேட்டை வரை அனைத்து கட்சி சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan