மின்சார வாகனங்களை இந்தியாவில் தயாரிக்க ஹூண்டாய் நிறுவனம் திட்டம்

share on:
Classic

இந்தியாவில் மின்சார வாகனங்களை தயாரிக்க ஹூண்டாய் நிறுவனம் 1,400 கோடி ரூபாயை முதலீடு செய்யவுள்ளது.   

தென் கொரிய வாகன நிறுவனமான ஹூண்டாய் இந்திய சந்தைக்கு மலிவு விலையில் மின்சார வாகனங்களை உருவாக்க அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 1,400 கோடி ரூபாயை முதலீடு செய்யவுள்ளது. உள்ளூர் வாடிக்கையாளர்களுக்காக ஒரு பிரத்யேக மின்சார வாகன கட்டமைப்பை உருவாக்க ஹூண்டாய் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக  இந்நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குனர் எஸ்.எஸ். கிம் தெரிவித்தார். மேலும், இந்த வாகனங்கள் பிற்காலத்தில் இந்தியாவில் இருந்து வளர்ந்து வரும் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படலாம் எனவும் தெரிவித்தார். அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி அலகு அமைக்கும் பணியில் ஹூண்டாய் நிறுவனம் ஈடுபட்டுவருகிறது.

News Counter: 
100
Loading...

udhaya