இன்னும் சிட்டியை பார்க்கவில்லை.. வருத்தம் தெரிவித்த சோபியா ரோபா..!

share on:
Classic

சோபியா ரோபோ இன்னும் 2.0 படத்தை பார்க்கவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபிய அரசு குடியுரிமை பெற்றுள்ள சோபியா ரோபோ மனிதர்களின் முக பாவனையை வைத்து தானாக சிந்தித்து பதிலளிக்கும் திறன் பெற்றது. இதற்கு ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் 'புதுமைகளின் வெற்றியாளர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது. இந்தப் பட்டம் கிடைக்கப் பெற்ற முதல் மனிதரல்லாத ஒரு பொருள் இதுவேயாகும்.

சோபியாவின் ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி காந்த், ஏமி ஜாக்சன் நடிப்பில் வெளியான '2.0' படத்தை பாத்தாச்சா என்று கேட்டார். அதற்க்கு சோபியா, "நான் பிசியாக உள்ளேன். அந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை. தயவுசெய்து மன்னிக்கவும்" என்று கூறியிருக்கிறது.

I've been so busy, I haven't had a chance to go to see it yet. No spoilers, please! #Shankar #2Point0 #AskSophia https://t.co/IyBHj7tH1b

— Sophia (@RealSophiaRobot) December 20, 2018

News Counter: 
100
Loading...

sasikanth