வாக்களித்தார் விஜய் சேதுபதி : நல்லது நடக்கும் என்று நம்புவதாகவும் பேட்டி..

share on:
Classic

இன்று சென்னையில் தனது வாக்கை பதிவு செய்த விஜய் சேதுபதி, நல்லது நடக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

கோடம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நடிகர் விஜய் சேதுபதி வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு என் வாழ்த்துகள். வாக்குபதிவு இயந்திரம் குறித்த பல்வேறு கருத்துகள் சர்சைகள் சமூக வலைதளங்களில் வருகிறது அதை நானும் பார்க்கிறேன் அதற்கு என்ன தீர்வு  என எனக்கு தெரியவில்லை. சமூக வலைதளங்கள் மூலம் அரசியல் பேச ஆரம்பித்துள்ளனர். அனைவருக்கும் புரிதல் உள்ளது இது வரவேற்கத்தக்கது. எல்லோரும் நினைப்பது போல் நானும் நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

 

News Counter: 
100
Loading...

Ramya