"மு.க.ஸ்டாலின் முதல்வராகும் நாளை எதிர்நோக்குகிறேன்"

share on:
Classic

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராகும் நாளை தான் எதிர்பார்த்து கொண்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டதில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஆளப்படும் நாடாக இந்தியா இருக்க கூடாது என்றும் நாக்பூரில் இருந்து தமிழகம் ஆளப்படக்கூடாது என்றும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகும் நாளை எதிர்பார்த்து கொண்டிருப்பதாகவும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமைக்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துவோம் என்றும் தெரிவித்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind