எனக்காக கடவுளிடம் எதுவும் கேட்பதில்லை : கேதர்நாத் பயணம் குறித்து மோடி விளக்கம்..

share on:
Classic

கொடுப்பதற்காகவே நாம் படைக்கப்பட்டு இருக்கிறோம் எடுப்பதற்காக அல்ல என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத்தில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்குள்ள மலைப் பகுதிகளில் தனியாக நடைப் பயணம் செய்த அவர், அங்குள்ள குகையில் சிறிது நேரம் தியானம் செய்தார். பின்னர் கேதர்நாத் கோவிலில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, செய்தியாளர்களிடம் பேசினார். கேதர்நாத்துக்கும் தமக்கும் உணர்வுப்பூர்வமான உறவு இருப்பதாகவும், கேதர்நாத்தின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்வேன் எனவும் கூறினார். கேதேர்நாத்தில் வழிபட்டதை தான் அதிர்ஷ்டமாக கருதுவதாகவும், தனக்காக எதையும் கேட்டு கோவிலுக்கு செல்வதில்லை எனவும் அவர் கூறினார். பின்னர் அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி பிரதமர் மோடி கையசைத்தார்.

News Counter: 
100
Loading...

Ramya