தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் வீட்டில் வருமான வரி சோதனை..வெற்றியை தடுக்க சதி..?

share on:
Classic

தேர்தலுக்கு ஒரு நாளே உள்ள நிலையில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்

குண்டூர் நாடாளுமன்ற தொகுதியின் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக கல்லா ஜெயதேவ் போட்டியிடுகிறார். இந்நிலையில் இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்றிரவு முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் அவரது ஆதரவாளர்கள் இருவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 

வருமான வரித்துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் பட்டாபிபுரம், குண்டூர் ஆகிய பகுதிகளில் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனிடையே தன்னுடைய வெற்றியை தடுக்கவே வருமான வரிச்சோதனை நடத்தப்பட்டதாக கல்லா ஜெயதேவ் குற்றம்சாட்டியுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind