கமல்ஹாசன் கட்சியில் இணைய ஆசை - ஷகீலா

share on:
Classic

மலையாள படத்தில் கொடிக் கட்டிப் பறந்த ஷகீலா, கமல்ஹாசன் கட்சியில் இணைய தயார் என்று கூறியுள்ளார்.

 

சிறு வயதில் ஷகீலா :
17 வருடங்களுக்கு முன்பு மலையாள படத்தில் வளம் வந்தவர்தான் கவர்ச்சி நடிகை ஷகீலா. இவருடைய படங்கள் பெரும் வசூல் சாதனை படைத்து வந்தது. மேலும் இவர் படம் வெளியாகவிருந்தால் மற்ற நடிகர்கள் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் ரிலீசை தள்ளிவைக்கும் நிலைமை இருந்தது. ஷகீலா சென்னையில் பிறந்தவர். இவருடைய தந்தை தமிழ்நாட்டையும், தாயார் ஆந்திர மாநிலத்தையும் சேர்ந்தவர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் சிறு வயதிலேயே நடிக்க ஆர்வம் கொண்டிருந்தார். ’கன்னடத்தம்பிகல்’ மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிகரமான படங்களில் ஒன்றாகும். அது ஷகீலாவை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது.

 

கொடி கட்டி பறந்த ஷகீலா :

அவரது கவர்ச்சி திரைப்படங்கள் கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. அவரது திரைப்படங்கள் பல்வேறு வெளிநாட்டு மொழிகளிலும் கூட மொழிமாற்றம் செய்யப்பட்டன. 2003-ஆம் ஆண்டு முதல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நகைச்சுவை சார்ந்த குடும்ப பாத்திரங்களிளும் ஷகீலா தோன்றினார். பின், நடிப்பதை தவிர்த்த இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு ’சீலாவதி’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இது இவருடைய தனது 250-வது திரைப்படமாகும். மேலும், ஷகீலாவின் வழக்கை வரலாறு படமாகி வருகிறது. அதில் ரிச்சா நடித்து வருகிறார்கள். கோடை விடுமுறையில் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஷகீலாவின் சிறு வயது ஆசை :
தன்னுடையை சிறு வயது ஆசை குறித்து பேசிய ஷகீலா, ”எனக்கு சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க ஆர்வம் அதிகம். என்னால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியும். ஆனால் ஷகீலா என்ற சொன்னாலே அனைவரும் கவர்ச்சி பெண் கதாபாத்திரத்தில் நடிப்பவர் என்பதுபோல் முத்திரை குத்திவிட்டனர். என் குடும்ப சூழ்நிலைக்காக கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தேன். ஆனால் என்னை என் குடும்பத்தில் ஒருத்தர் ஏமாற்றி, சம்பாதித்த பணத்தை எல்லாம் பறித்துக்கொண்டார். நான் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளேன். எனக்கு பல கொலை மிரட்டலும் வந்துள்ளது. நான் பலமுறை தற்கொலைக்கு முயன்று இருக்கிறேன்” இவ்வாறு கூறியுள்ளார். 
 

கமல் கட்சியில் சேர ஆசை :

ஷகீலா ஒரு தீவிர கமல்ஹாசன் ரசிகை. இவர் எப்போதெல்லாம் ஓய்வெடுக்கின்றாரோ அப்போதெல்லாம் கமல்ஹாசனின் பாடல்களை கேட்பதோடு, படங்களை பார்ப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். கமல்ஹாசனின் அனைத்து படங்களையும் கண்டு ரசித்துள்ள ஷகீலா, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைய மிகுந்த ஆர்வமுடன் காத்திருப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

aravind