close
முகப்புவிராட் கோலி கொடுத்த பரிசை இந்தியாவில் உபயோகிப்பேன் : டேன்யல் வையட்

விராட் கோலி கொடுத்த பரிசை இந்தியாவில் உபயோகிப்பேன் : டேன்யல் வையட்

விராட் கோலி கொடுத்த பரிசை இந்தியாவில் உபயோகிப்பேன் : டேன்யல் வையட்

இங்கிலாந்து மகளிர் கிரிகெட் அணியின் கேப்டன் டேன்யல் வையட்க்கு விராட் கோலி அளித்த பரிசை  இந்தியாவில் நடைபெறவுள்ள முத்தரப்பு டி-20 போட்டியில் உபயோகிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி 2014ம் ஆண்டு ட்விட்டரில் பதிவு செய்தார் டேன்யல். அந்த ட்வீட்டால் இந்தியாவில் பிரபலமானர் டேன்யல் வையட். அதன்பிறகு 2017ல் விராட் கோலியின் பெயரை கிரிக்கெட் மட்டையில் தவறாக எழுதிய புகைப்படத்தை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு ஆளானார். இவருக்கு, விராட் கோலி, பயற்சி ஆட்டத்தின் போது ஒரு கிரிக்கெட் மட்டையை பரிசாக அளித்தார். தற்போது, இந்தியாவில் நடைபெறவுள்ள முத்தரப்பு டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்த மட்டையை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார் டேன்யல்.

26 வயதாகும் டேன்யல் வையட் இங்கிலாந்து கேப்டனாக 53 ஒரு நாள் போட்டிகளிலும் ,மொத்தமாக 73 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.