நான் மிகவும் ஏமாற்றமடைவேன் : வடகொரியாவின் அணு ஆயுதம் குறித்து ட்ரம்ப் கருத்து

share on:
Classic

ஒருவேளை வடகொரியா அதன் அணு ஆயுத தளங்களை புனரமைத்தால் நான் மிகவும் ஏமாற்றமடைவேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் பியாங்யாங்கில் உள்ள யோங்பியான் அணு ஆயுத ஏவுகணை தளத்தை சீரமைத்து வருவதாக தென் கொரியாவின் உளவு அமைப்பு நேற்று முன் தினம் தெரிவித்தது. அந்த ஏவுகணை தளத்தில் இருந்த சுமார் 5 - 7 கி.மீ வரை அணுஆயுதங்கள் கடந்த ஆண்டு பிரித்தெடுக்கப்பட்டன. இந்நிலையில் வடகொரியா மீண்டும் அவற்றை புனரமைத்து வருவதாக தகவல் வெளியானது. இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “ மீண்டும் வடகொரியா அணுஆயுதத்தில் ஆர்வம் செலுத்தி வருவதாக செய்திகள் வருகிறது. அப்படி இருக்காது என்று நான் நம்புகிறேன். ஒரு வேளை அப்படி இருந்தால் நான் மிகவும் ஏமாற்றமடைவேன். என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அந்த தகவல் உறுதிசெய்யப்பட்டால் வடகொரியாவின் அமைதி ஒப்பந்தத்திற்கு அது மிகப்பெரிய தடையாக இருக்கும் ” என்று தெரிவித்தார். 

கடந்த மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இருவரும் சந்தித்த போது அணு ஆயுதம் குறித்த எந்த ஒப்பந்தமும் முடிவுக்கு வராததால் இருவரும் கூட்டத்தை விட்டு வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ramya