அபிநந்தனுக்கு "வீர் சக்ரா" விருது வழங்க பரிந்துரை..!

share on:
Classic

பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தனின் வீரதீர செயலை பாராட்டி வழங்கப்படும் வீர் சக்ரா விருது வழங்க இந்திய விமானப்படை பரிந்துரைத்துள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டது. அப்போது, இந்திய விமான படை வீரர் அபிநந்தன் எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி கொண்டார். இந்த நிலையில், பல்வேறு நடவடிக்கைக்களை தொடர்ந்து அவர் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த நிலையில் அபிநந்தனின் வீரதீர செயலை பாராட்டி வழங்கப்படும் வீர் சக்ரா விருது வழங்க இந்திய விமானப்படை பரிந்துரைத்துள்ளது. இதனிடையே, ஸ்ரீநகர் விமானப்படை பிரிவில் இருந்து, மேற்கு பிராந்திய விமானப்படை பிரிவு அதிகாரியாக விங் கமாண்டர் அபிநந்தன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அபிநந்தனின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேற்கு பிராந்தியத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan