ஏஎன்- 32 ரக விமானத்தில் பயணித்த 13 பேரின் நிலை என்ன..?

share on:
Classic

மாயமான ஏஎன்- 32 ரக விமானத்தின் பாகங்கள் அருணாசலப் பிரதேசத்தின் லிபோ அருகே கண்டெடுக்கப்பட்ட நிலையில், விமானத்தில் பயணித்த 13 பேரின் நிலை குறித்து அறிய தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 ரக விமானம் கடந்த 3-ஆம் தேதி அருணாசலப் பிரதேசத்துக்கு புறப்பட்டது. புறப்பட்ட அரை மணி நேரத்தில், இந்த விமானத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் விமானத்தில் பயணித்த 13 பேரின் நிலை கேள்விக்குறியானது. இதைத் தொடர்ந்து விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. 8 நாட்களுக்குப் பிறகு விமானத்தின் பாகங்களை நேற்று அருணாசலப் பிரதேச மாநிலம் லிபோ என்ற இடத்திற்கு 16 கிலோ மீட்டர் வடக்கே கண்டெடுக்கப்பட்டது. இந்தநிலையில், ஏஎன்-32 ரக விமானத்தில் பயணித்தவர்களின் நிலை குறித்து அறிய அதிநவீன ஹெலிகாப்டர்களின் உதவியுடன் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan