தோனியின் மீது காதல் மழை பொழியும் ஐசிசி : பட்டய கிளப்பும் டுவீட்கள் !

share on:
Classic

சமீப காலங்களாகவே தோனியின் மீது அதிக அன்பை வெளிப்படுத்தி வரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி)  அந்த வரிசையில் திரும்பவும் பாடல் வரி ஒன்றை அவருக்கு டெடிகேட் செய்து ட்வீட் செய்துள்ளது. 

இது 2-வது முறை :
சர்வதேச கிரிக்கெட்டில் தோனி மிக முக்கியமானவர். அவரது திறமைக்கும், குணத்துக்கும் உலகம் முழுவதும் பலர் அவருக்கு ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் தோனி எடுத்த ஒரு அபரிவிதமான விக்கெட்டிற்காக அவரை புகழ்ந்து தள்ளிய ஐசிசி, "விக்கெட் எடுக்க தோனி ஸ்டம்ப் பின்னாடி நிற்கும் போது மட்டும், ரன் எடுக்க கோட்டை தாண்டாதீர்கள்" என்று நகைச்சுவையுடன் கூறியது. அந்த டுவீட்டை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். தோனிக்கு உலகம் முழுவதும் இத்தனை கோடி ரசிகர்களாக என்று வியந்த ஐசிசி திரும்பவும் அவரை புகழ்ந்து டுவீட் செய்துள்ளது. 

 

வேற லெவல் டுவீட்கள் :
பாடல் வரிகளை ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் டெடிகேட் செய்த போது தோனியின் வரி மட்டும் வேற லெவலில் இருந்தது. ஜான் லெனனின் இமேஜின் பாடல் வரியான " கற்பனை செய்து பாருங்கள். தோனி மட்டும் இல்லை என்றால்" முதலில் டுவீட் செய்தது. உடனே அதனை தொடர்ந்து "கேட்ச் செய்ய யாருமே இருக்க மாட்டார்கள். இப்படி ஸ்டம்பிங் செய்ய யாருமே இருக்க மாட்டார்கள். பிறகு பேட்ஸ்மேன்களுக்கு 2 ,3 ரன் எல்லாம் ஓட தைரியம் வந்து விடும்" என்று கூறியுள்ளது. இதுமட்டும் இல்லாமல் அவரை புகழ்ந்து தொடர்ந்து பல டுவீட்களை அடுத்தடுத்து வெளியிட்டு கொண்டே இருந்தது. இந்நிலையில் இந்த டுவீட்கள் தற்போது வைரலாகி வருகிறது.  

 

News Counter: 
100
Loading...

priya