தமிழை கவுரபடுத்திய ஐசிசி..! இங்கு இந்தி-க்கு இடம் இல்லை..!

share on:
Classic

நடந்து வரும் உலகக்கோப்பையில் தமிழ் மொழியை ஐசிசி கவுரவப்படுத்தியுள்ளது.

கிரிக்கெட்டும் தமிழர்களும் பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டனர். அணி தோற்றாலும் ஜெயித்தாலும் அதிக அளவு உணர்ச்சியை வெளிப்படுத்தக்கூடியவர்கள் தமிழர்களே. அதற்கு மிக சிறந்த உதாரணம் ஐபிஎல் போட்டியே. சென்னை அணியை ரசிகர்கள் உற்சாகப்படுத்தும் அளவுக்கு மற்ற அணி ரசிகர்கள் அந்தந்த அணியை உற்சாகப்படுத்துவதில்லை.

மற்ற நாட்டு வீரர்கள் ஆனாலும் சென்னை அணிக்காக விளையாடும் போது மக்கள் அவர்கள் மீது காட்டும் அன்பிற்கு குறை இருக்காது. தமிழ் மக்களின் அன்புக்கு கைமாறு செய்யும் விதமாக ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் உட்பட பல வீரர்கள் சென்னை அணியின் வெற்றியின் போதும், தோல்வியின் போதும் தமிழ் மொழியிலேயே ட்விட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்ததை யாராலும் மறக்க முடியாது. 

இந்நிலையில் உலகக் கோப்பை இறுதிப்போட்டி இன்று இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. போட்டிக்கு முன்னதாக இரு அணி கேப்டன்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் பேசியவற்றை சில மொழிகளில் சப்டைட்டில் செய்து வெளியிட்டது ஐசிசி. அதன்படி இரு அணி கேப்டன்கள் பேசிய வீடியோக்களுக்கு தமிழ் மொழியில் சப்டைட்டில் கொடுத்து தமிழ் மொழியை கவுரவப்படுத்தியுள்ளது. 

இந்திய மொழிகளில் தமிழ் மற்றும் தெலுங்கு மட்டுமே இடம்பிடித்துள்ளது. இந்தி மொழியை ஐசிசி சப் டைட்டில் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Saravanan