தோனி ரன் அவுட் குறித்து வீடியோ வெளியிட்ட ஐசிசி..! கடுப்பான இந்திய ரசிகர்கள்..!

share on:
Classic

தோனி ரன் அவுட் குறித்த வீடியோ ஒன்றை தனது ட்வீட்டர் பக்கத்தில் ஐசிசி பதிவிட்டுள்ளது. இது ரசிகர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய - நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியின் மிக அருகில் வந்து தோல்வியடைந்து வெளியேறியது. இந்த போட்டியில் தோனி 50 ரன்களை எடுத்த போது இரண்டாவது ரன் ஓட முயற்சித்தார். அப்போது கப்டில் வீசிய பந்து நேரடியாக ஸ்டெம்பில் பட்டு ரன் அவுட் ஆனார். அவர் அவுட்டாகாமல் இருந்திருந்தால் வெற்றி இந்திய அணிக்கு கிடைத்திருக்கும் என ரசிகர்கள் புலம்பிவரும் நிலையில், தோனி ரன் அவுட் தொடர்பான வீடியோ ஒன்றை ஐசிசி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் "Hasta La Vista, Dhoni" (போய் வாருங்கள், மீண்டும் சந்திப்போம்)என்று பதிவிட்டுள்ளது. இது இந்திய ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

News Counter: 
100
Loading...

Saravanan