இந்திய அணியை வீழ்த்த முடியும் சவால் விடுகிறார் வங்க தேச வீரர்..!

share on:
Classic

நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியை சந்திக்காத அணியாக திகழ்ந்து வருகிறது. அதை நாங்கள் மாற்றிக்காட்டுவோம் என வங்க தேசத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.

நேற்று உலகக்கோப்பை லீக் தொடரில் வங்கதேச அணி, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. அதில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது. அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அந்த அணி வீரர் ஷாகிப் அல் ஹசன் இனி வரும் இரண்டு ஆட்டங்களிலும் நாங்கள் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

அடுத்து ஜீலை 2-ல் நாங்கள் இந்திய அணியை எதிர்கொள்ள உள்ளோம். இந்திய அணியை வீழ்த்துவது சுலபமான காரியம் இல்லை, இந்திய அணி உலக தரம் வாய்ந்த அணியாக திகழ்ந்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. மேலும் அணியில் அனைவரும் நல்ல ஃபாமில் உள்ளனர். 
எங்கள் அணியில் லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிம், சவுமியா சர்க்கார், தமிம் இக்பால், மோர்டாசா ஆகிய வீரர்கள் நல்ல பார்மில் உள்ளனர். இந்தியாவை ஆப்கானிஸ்தான் அணி சுழற்பந்தின் மூலம் திணறடித்தது போல, நாங்களும் பந்து வீச்சில் இந்திய அணிக்கு அச்சுறுத்தல் அளிப்போம். எங்களிடம் தரமான பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்றார். இதற்கு முன் இந்தியாவை 3 முறை வங்கதேச அணி தோற்கடித்திள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Saravanan