40,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஓநாயின் தலை கண்டுபிடிப்பு..!!

share on:
Classic

ஐஸ் ஏஜில் வாழ்ந்த ஓநாயின் தலையை செர்பிய பனிமலையில் ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

ரஷ்ய ஆர்டிக் பகுதியான யகுடியாவில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஓநாயின் தலை கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஓநாய், மம்மூத்துகள் எனப்படும் மிகப்பெரிய உயிரினங்கள் அழியத் தொடங்கிய காலக்கட்டத்தில் வாழ்ந்ததாக ரஷ்யா அகாடமி ஆப் சயின்ஸ் என்ற அமைப்பை சேர்ந்த வாலரி பிளாட்னிகோவ் என்ற ஆராய்ச்சியாளர் தெரிவித்தார். தற்போதைய காலக்கட்டத்தில் வாழும் ஓநாய்களை விட அது 25% சதவீதம் பெரியது என்றும் கூறியுள்ள அவர், அது ஆணா, பெண்னா என்று தெரிவிக்கவில்லை. இதற்கு முன்பு கண்டறியப்பட்ட ஓநாய்களின் மண்டை ஓடுகள் முடிகள் இல்லாமலும் திசுக்கள் இல்லாமலுமே இருந்தன. ஆனால் இந்த ஓநாயின் தலையில் ரோமம், காதுகள், நாக்கு, பாதுகாக்கப்பட்ட மூளையுடன் உள்ளது. சமூக வலைதளங்களில் இந்த புகைப்படத்தை பதிவிட்டு பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

News Counter: 
100
Loading...

Ramya