குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு..!

share on:
Classic

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக, இந்தியர் குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில், சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

இந்திய கடற்படையில் பணியாற்றி, ஓய்வுபெற்ற குல்பூஷண் ஜாதவ், தொழில் செய்வதற்காக ஈரான் சென்றிருந்த போது, பாகிஸ்தான் உளவு அமைப்பினரால் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக, அவர் மீது தொடரப்பட்ட வழக்கில், மரண தண்டனை விதித்தது அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் செயல்படும் சர்வதேச நீதிமன்றத்தில், இந்தியா வழக்கு தொடர்ந்தது. இரு தரப்பு வாதங்களை விசாரித்த நீதிமன்றம், இன்று தீர்ப்பு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

News Counter: 
100
Loading...

aravind