தமிழகத்தில் டிக் டாக் செயலிக்கு தடை..?

share on:
Classic

டிக் டாக் செயலி தமிழகத்தில் முழுமையாக தடை செய்யப்படும் என அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார்

டிக் டாக் செயலிக்கு தடைவிதிக்கப்படுமா என சட்டபேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி பேரவையில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன், டிக் டாக் செயலியை முழுவதுமாக தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். ஒரு செயலியை முற்றிலுமாக நீக்கும் அதிகாரம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறிய அவர், டிக் டாக் செயலியை நோடல் குழு கண்காணித்து வருவதாக கூறினார். 

இந்த செயலியை நீக்குவது தொடர்பாக பிப்ரவரி மாதமே மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டதாக தெரிவித்த அமைச்சர் மணிகண்டன், மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பி அந்த செயலி தடை செய்யப்படும் என உறுதி அளித்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind