மகாத்மா காந்தியைக் கொன்றவரின் சித்தாந்தம் வெற்றி பெற்றுள்ளது - திக்விஜய் சிங் வேதனை

share on:
Classic

மகாத்மா காந்தியைக் கொன்றவரின் சித்தாந்தம் வெற்றி பெற்றுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் வேதனை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் போபால் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாக்கூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையில், பிரக்யா சிங் தாக்கூரிடம் தோல்வியடைந்த திக்விஜய் சிங், நாட்டில் இன்று, மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவின் சித்தாந்தம் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், மகாத்மா காந்தியின் கொள்கை தோல்வி அடைந்துள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan