பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் இருந்தால்... பாஜக எம்.பி என்ன சொன்னார்.?

share on:
Classic

தனக்கு அதிகாரம் இருந்தால், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கொன்று விடுவேன் என்று பாஜக எம்.பி தெரிவித்துள்ளார். 

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கான்பூர் பாஜக எம்.பி. சத்யதேவ் பச்சோரி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “ பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மனிதநேயமற்ற செயல். பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் எனக்கு இருந்தால், அவர்களை கொன்றுவிடுவேன். நான் காவல்துறையினருடன் பேசும் போது, சாலை விதிகளை மீறுதல் போன்ற சிறுகுற்றங்களில் ஈடுபட்டவர்களை விடுவித்தாலும்,கொலை குற்றவாளிகளை விடுவிக்க கூடாது என்று கூறுவேன். ஓவ்வொரு காவல்துறை அதிகாரியும் தங்கள் பணியை சிறப்பாக செய்கின்றனர். பாஜக ஆட்சியில் குற்றவாளிகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள். ஒற்றுமையில்லாத, எதிர்மறை அரசில் வேலை செய்வதற்கு அதிகாரிகளுக்கு கடினமாக இருக்கும், ஆனால் பாஜக அரசு அனைத்தையும் சுமூகமாக நடத்துகிறது” என்று சத்யதேவ் தெரிவித்தார். 

News Counter: 
100
Loading...

Ramya