அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ராக்கெட்டை விண்ணில் செலுத்திய ஈரான்?..

share on:
Classic

அண்மையில் வெளியான செயற்கைக்கொள் புகைப்படங்களால் அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி, ஈரான் தனது ராக்கெட்டை விண்ணில் செலுத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அமெரிக்கவைச் சேர்ந்த டிஜிடர்குளோப் ஆய்வு அமைப்பு, கடந்த செவ்வாய்க்கிழமை ஈரானின் இமாம் கமேனி ஆய்வு மையத்தின் புகைப்படத்தை வெளியிட்டது. அந்தப்படத்தில் ஏவுதளத்தின் மீது ராக்கெட் நிறுவப்பட்டிருந்தது. ஆனால் புதன்கிழமை வெளியிட்ட புகைப்படத்தில் அந்த ராக்கெட் காணவில்லை, மேலும் ராக்கெட் புறப்பட்டு சென்றதற்கான கரிப்படிவங்களை போன்ற தோற்றம் ஏவுதளத்தில் காணப்பட்டது.

எனவே இடைப்பட்ட நேரத்தில் அந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை அந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டிருந்தால், அதிலிருந்த செயற்கைகோள் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதா என்பது குறித்த தகவல்களும் இல்லை. புகைப்படத்தில் காணப்பட்ட ராக்கெட்டில் “ஈரானில் தயாரிக்கப்பட்டது”, “40-வது ஆண்டு” என்று பார்ஸி மொழியில் எழுதப்பட்டிருந்தது. ஈரானில் இஸ்லாமியப் புரட்சியின் 40-வது ஆண்டு தினத்தை குறிக்கும் வகையில் அவ்வாறு குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

எனினும் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது குறித்து ஈரான் ஊடகங்கள் உறுதிப்படுத்தவில்லை எனவும், ஏற்கனவே இது போன்ற நிகழ்வுகளை சிறிது தாமதத்திற்கு பிறகே ஊடகங்களில் செய்தியாக வெளிவந்தன என்றும் தெரிகிறது. கடந்த மாதம் தனது செயற்கைகொளை சொந்த ராக்கெட் மூலம் ஈரான் விண்ணில் செலுத்த முயன்றது. ஆனால் அந்த் முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், மற்றொரு செயற்கோளை புதிய ராக்கெட் மூலம் ஈரான் விண்ணில் செலுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

Ramya