எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்திருந்தால் பாஜகவை வெற்றி கொண்டிருக்கலாம் - திருமாவளவன்

share on:
Classic

தமிழகத்தைப் போல, பிற மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் காங்கிரசுடன் கைகோர்த்திருந்தால் பாஜகவை வெற்றி கொண்டிருக்கலாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள விசிக தலைவர் திருமாவளவன், சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தைப் போல, பிற மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் காங்கிரசுடன் கைகோர்த்திருந்தால் தேர்தலில் பாஜகவை புறமுதுகிட்டு ஓடச் செய்திருக்க முடியும் என்று கூறினார். எதிர்க்கட்சிகள் தனித்தனியாக சிதறி நின்றதால் பாஜக எதிர்ப்பு வாக்கு வங்கி 2014 பொதுத் தேர்தலைப் போல இந்த தேர்தலிலும் சிதறிவிட்டது என்று அவர் தெரிவித்தார். மேலும், சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் இந்து, இந்து அல்லாதார் என்ற வெறுப்பு பிரசாரம் தேர்தலில் பாஜகவுக்கு கைகொடுத்துள்ளது என்று திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan