‘நீர்வரத்தை நீ தடுத்தால்.. நீ மூச்சு விடுவதை நான் தடுப்பேன்’ : மோடிக்கு மிரட்டல் விடுத்த பயங்கரவாதி..!!

share on:
Classic

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுத்து நிறுத்தினால் பிரதமர் மோடியின் மூச்சை நான் நிறுத்துவேன் என்று பயங்கரவாத தலைவர் ஹபீஸ் சையது மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நதிகள் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் இருந்து வருகிறது. இதில் இந்தியாவிலிருந்து உபரி நீர் ஜீலம், சீனாப், ராபி,பியாஸ் மற்றும் சட்லஜ் போன்ற ஆறுகள் வழியாக பாகிஸ்தானிற்கு செல்கிறது. சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தது. காஷ்மீரில் மூன்று அணைகள் கட்டப்பட்டு பாக்கிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுத்து நிறுத்துவேம் என அமைச்சர் நிதின் கட்கரி  கூறியிருந்தார்.

பாகிஸ்தானில் உள்ள பயங்கராவாதி அமைப்பான ‘ஜமாத்-உத்-தாவா’வின் தலைவரான ஹபீஸ் சையது பிரதமர் மோடிக்கு வீடியோ மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். அந்த வீடியோவில் “நீ நீர்வரத்தை தடுத்தால் நீ மூச்சு விடுவதை நான் தடுப்பேன்” என மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வீடியோ பாகிஸ்தானில் வைரலாகி வருகிறது. 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan