டிசம்பரில் தொழில்துறை வளர்ச்சி 2.4%... சரிவா? சாதனையா?...

share on:
Classic

கடந்த டிசம்பரில் இந்திய தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியானது (IIP) 2.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்தாண்டில் 7.3 சதவீதமாக இருந்தது. 

டிசம்பரில் தொழில்துறை வளர்ச்சி:
நவம்பரில் 0.3% மட்டுமே வளர்ச்சி கண்டிருந்த தொழில்துறை உற்பத்தி விகிதமானது இப்போது சற்று ஏறுமுகம் பெற்றுள்ளது. கடந்த டிசம்பரில் பொருட்கள் தயாரிப்புத் துறையை பொறுத்தவரை, மொத்தமுள்ள 23 தொழில்துறை குழுக்களில் 13 மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளன. மற்றவை சரிவையே சந்தித்துள்ளன. மேலும், உட்கட்டமைப்பு மற்றும் கட்டுமான பொருட்கள் வளர்ச்சியானது 10.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

ஏப்ரல்-டிசம்பர் 2018-19 காலகட்டத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியானது 4.6 சதவீதமாக உயர்ந்திருந்தது. இந்த விகிதமானது இதற்கு முந்தைய காலகட்டத்தில் 3.7 சதவிகிதமாக மட்டுமே இருந்தது. பொருட்கள் தயாரிப்பு துறை வளர்ச்சியானது 2.7% என்ற வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 8.7 சதவீதமாக இருந்தது. 

சுரங்கத்துறை உற்பத்தி வளர்ச்சியைப் பொறுத்தவரை 1 சதவீதமாக சரிந்துள்ளது. இது கடந்த நவம்பரில் 2.7 சதவீதமாகவும், கடந்த 2017 டிசம்பரில் 1.2 சதவீதமாகவும் அதிகரித்து காணப்பட்டது. மின்சாரத்துறை உற்பத்தி வளர்ச்சியை எடுத்துக்கொண்டால் 4.4% என்ற அளவிற்கு நடுநிலையாக உள்ளது. இது கடந்த நவம்பரில் 5.1 சதவீதமாக இருந்தது. 

இந்திய தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி விகிதம்:

2007: அக்டோபர் 1.8%, நவம்பர் 8.5%, டிசம்பர் 7.3%... 

2018: ஜனவரி 7.5%, பிப்ரவரி 6.9%, மார்ச் 4.6%, ஏப்ரல் 4.5%, மே 3.8%, ஜூன் 7.0%, ஜூலை  6.5%, ஆகஸ்டு 4.7%, செப்டம்பர் 4.6%, அக்டோபர் 8.4%, நவம்பர் 0.3% மற்றும் டிசம்பர் 2.4%...

சந்தை நுகர்வுப்பொருட்கள்:
கடந்த நவம்பரில் 3.2 சதவீதமாக இருந்த அத்தியாவசிய பொருட்கள் வளர்ச்சியானது தற்போது 1.2 சதவீதமாக சரிந்துள்ளது. இதேபோல் 4 முக்கிய நுகர்வுப்பகுதிகளின் வளர்ச்சியிலும் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்படி,

1. மூலதன பொருட்கள் வளர்ச்சி 5.9% (நவம்பரில் 3.4%)
2. இடைநிலை பொருட்கள் வளர்ச்சி 1.5% (நவம்பரில் 4.5%)
3. நுகர்வோர் சாதனங்கள் வளர்ச்சி 2.9% (நவம்பரில் 0.9%)
4. 3 ஆண்டுகள் வரை மட்டும் உழைக்கக்கூடிய நுகர்வோர் அல்லா சாதனங்கள் வளர்ச்சி 5.3% (நவம்பரில் 0.6%)

News Counter: 
100
Loading...

mayakumar