காங்கிரஸ் கட்சியை விட்டுப் பிரிகிறாரா விஜயதரணி ! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புகாங்கிரஸ் கட்சியை விட்டுப் பிரிகிறாரா விஜயதரணி !

காங்கிரஸ் கட்சியை விட்டுப் பிரிகிறாரா விஜயதரணி !

காங்கிரஸ் கட்சியை விட்டுப் பிரிகிறாரா விஜயதரணி !

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயதரணி தனிப்பட்ட முறையில் வரவேற்றிருந்தார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனிப்பட்ட முறையில் பெண்கள் அரசியலில் நிலைக்க வேண்டும் என்றால் போராட வேண்டியதாக இருக்கிறது. தமிழகத்தில் பெண்கள் சார்ந்த பல நல்லத் திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா. 

அவரது படம் சட்டப்பேரவையில் திறப்பது நல்ல நிகழ்வாகவே பார்க்கிறேன். அதனால் தான் வாழ்த்து தெரிவித்தேன். அன்னை இந்திரா காந்திக்கு பிறகு எனக்கு பிடித்த தலைவர் ஜெயலலிதா.

ஜெயலலிதா மரணிக்கும் தருவாயில் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படவில்லை. அதனால் அவரது படம் திறப்பதில் தவறும் இல்லை. என தெரிவித்தார்.

முன்னதாக சட்டப் பேரவையில் ஜெயலலிதாவின் படம் திறப்பதை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. இந்நிலையில் விஜயதரணியின் இக்கருத்து காங்கிரஸ் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.