IL&FS நிறுவன ஊழல் வழக்கு - ராஜ் தாக்ரே நாளை ஆஜர்..!!

share on:
Classic

ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவன ஊழல் வழக்கில் நாளை சிபிஐ முன்பு நாளை ராஜ் தாக்கரே ஆஜராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷியின் மகன் உன்மேஷ் ஜோஷிக்கு சொந்தமான நிறுவனம் தான் கோகினூர் சிடிஎன்எல் நிறுவனம் ஆகும். கோகினூர் சிடிஎன்எல் நிறுவனத்தில் கடனாக ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனம் ரூ.450 கோடிக்கு மேல் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த முறைகேடு தொடர்பாக உன்மேஷ் ஜோஷிக்கும் அவருடைய கூட்டாளியாக இருந்த மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதில் உன்மேஷ் ஜோஷி, மும்பையில் உள்ள அம்லாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜரானார். இந்நிலையில் ராஜ் தாக்கரே 22 - ஆம் தேதி சிபிஐ முன் ஆஜராகிறார்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan