தமிழக அரசின் செயல்பாடுகள் நீதிமன்றத்தை சோர்வடைய செய்து விட்டது..!!

share on:
Classic

சட்ட விரோத பேனர் வழக்கில், தமிழக அரசின் தொடர் செயல்பாடுகள் நீதிமன்றத்தை சோர்வடைய செய்து விட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பேனர்கள் அகற்றுவது தொடர்பாக டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அமர்வு விசாரித்தனர். அப்போது, சாதாரண மனிதர்கள் தவறு செய்தால் தண்டனை வாங்கி கொடுக்கும் அரசு, அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கால அவகாசம் கோருவது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் தமிழக அரசு தொடர்ந்து கால அவகாசம் கேட்டால் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும் என கண்டனம் தெரிவித்தனர். மேலும், அரசின் செயல்பாடுகளால் மனுதாரரிடம் நீதிமன்றம் மன்னிப்பு கோரும் நிலையை  தமிழக அரசு ஏற்படுத்திவிட்டதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan