கோவையில் கட்டு கட்டாக பணம், உரிமம் இல்லாத துப்பாக்கி பறிமுதல்..!

share on:
Classic

கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1,76,00,000  ரூபாய் மற்றும் உரிமம் இல்லாத துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்படும் பணம், பொருட்கள் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவை சங்கனூர் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். 

அப்போது சிங்காநல்லூர் வரதாராஜபுரம் பகுதியில் தனியார் ஏ.டி.எம்.ல் பணம் செலுத்த எடுத்து சென்ற ரூபாய் 1,76,00,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வாகனத்தில் இருந்த ஜம்மு காஷ்மீரை சேர்ந்த காவலாளி சச்சின்குமார் என்பவரிடம் உரிமம் இல்லாத ரைபிள் ரக துப்பாக்கி மற்றும் ஐந்து தோட்டாக்கள் பறிமுதல் செய்யபட்டது.

 

News Counter: 
100
Loading...

aravind