இம்ரான் கான் வெற்று அச்சுறுத்தல் விடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் : மத்திய அமைச்சர் கருத்து..

share on:
Classic

இம்ரான் கான் வெற்று அச்சுறுத்தல் விடுப்பதை நிறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது “ காஷ்மீர் விவகாரம் ஒருவேளை போரை நோக்கி நகர்ந்தால், இரண்டு நாடுகளும் அணு ஆயுத சக்தி வல்லமை கொண்ட நாடுகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் அணு ஆயுதப் போரில் யாரில் வெற்றியாளர் அல்ல. இது உலகளவில் தொடர் விளைவுகளை ஏற்படுத்தும். உலகின் சக்திவாய்ந்த நாடுகளுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அவர்கள் எங்களுக்கு ஆதரவளித்தாலும், அளிக்காவிட்டாலும் பாகிஸ்தான் சாத்தியமான செயல்களை செய்யும். காஷ்மீருக்காக எந்த எல்லைக்கும் செல்ல பாகிஸ்தான் தயாராக உள்ளது” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இம்ரான் கானின் இந்த கருத்துக்கு மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி பதலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக இன்று பேசிய அவர் “ அவர் (இம்ரான் கான்) இதுபோன்ற வெற்று அச்சுறுத்தல்களை விடுப்பதை நிறுத்தி கொண்டு, அவர் நாட்டின் நிலைமையை பார்க்க வேண்டும். அவரின் ஆதரவு தீவிரவாதிகளுக்கா அல்லது உலகத்திற்கா என்பதை அவர் முடிவு செய்ய வேண்டும். விரக்தியில் உள்ள பாகிஸ்தான் எதையாவது பேசி கவனத்தை திருப்ப வேண்டும் என்று முயற்சிக்கிறது. ஆனால் இதுபோன்ற செயல்களால் அந்நாட்டிற்கு எந்த லாபமும் கிடைக்காது “ என்று தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ramya