close
முகப்புபேசியே சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் செல்லூர் ராஜு ..!

பேசியே சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் செல்லூர் ராஜு ..!

February 04, 2018 329Views
பேசியே சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் செல்லூர் ராஜு ..!

அதிமுக தேர்தலை பார்த்து பயப்படும் கட்சி அல்ல, அது பிறக்கும் போதே கவச குண்டலத்துடன் பிறந்த கட்சி என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தேர்தலை பார்த்து பயப்படும் கட்சி அல்ல என்று கூறினார். 

மேலும், அதிமுக பிறக்கும் போதே கவச குண்டலத்துடன் பிறந்த கட்சி என்பதால், எந்தவொரு தேர்தலையும் அதிமுக எதிர்க்கொள்ள தயாராக உள்ளது என்றும் கூறினார். மேலும்,  காவிரி நீர் பெருவதில் தமிழக மக்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார். 

மேலும் நிகழ்ச்சியின் போது  பேசிய அமைச்சர், அதிமுக உறுப்பினர்கள் அடையாள அட்டை இருந்தால் அரசாங்கத்தில் உதவி பெற முடியும் என்று கூறியதால் மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.